Welcome to Thevar History 

Spears, Royal moustache, Guradian role - வெற்றி வேல் வீர வேல் .

Maravar (Tamil: மறவர்)

Maravar:


Maravar are one of the oldest social groups to be mentioned by the Sangam Tamil literature. This indicates an association with the Tamil land which is at least 2,000 years old. The writers of the Sangam Age place them in rural settlements withdrawn from cities. Maravar, in Tamil, means a warrior. Maravars are the courageous breed and were involved in the major wars that Tamilnadu witnessed. Other historians postulate that Maravar is derived from Tamil language term Marutham (called as Thinnai). They originally lived in ancient Tamil Country . The name of the city Madurai is also postulated to be derived from Maruthai and honorific title of local Pandyakings, dons, what ever you want. major maravaras based in Tirunelveli, Ramanadu and Tuticorin ( Vallanadu veera maravars) , Many areas of Tamilnadu and across the world.






The Maravar in Madura and tinnevelly likewise claim the position of Rajputs, and if we regard them as a warrior tribe, they are entitled to this distinction. They are also most probably in some way connected with the Mars of the north. The Maravar have to a great extent  preserved their freedom and independence. They are brave, warlike, and self- willed like semi- barbarous races, but  they latterly taken to more peaceful pursuits than they used to follow formerly. They were once very numerous. Their chief is the setupati of Ramnad, one of the oldest and most respected princes in Southern India, and who is still highly honored by and exacts honors from, the surrounding chiefs and princes. The active life which the maravan leads in the open air has imparted to him great bodily strength. He can be easily  distinguished from other natives by his good figure and generally erect and proud bearing.

மறவர்களின் கிளைகள்:


கிளைகள் என்றால் என்ன?

அகராதியில் இந்தச் சொல்லுக்கு வம்சம் என்று பொருள் கூறப்பட்டுள்ளது. இந்த வம்சத்தைச் சார்ந்தவர் என்பதைச் சொல்லுவதுதான் கோத்திரம். கிளை என்பது திருமண நிகழ்ச்சிகளுக்காக உருவாக்க பட்டது. ஒரே கிளை சார்ந்த ஆனும்,பென்னும் உறவினர்கள் ஆகவிடினும் சகோதர உறவு முறையே. கிளை என்பது பெண்ணை  சார்ந்தது.


இதை பெண்  வழி சேரல் என கூறுவர். பென்னுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு பென்னின் கிளையே சாரும்.
ஆதாவது தகப்பன்(வெட்டுவான்) கிளையும் மகன்(தருமர்) கிளையும் இருக்கும் காரணம் அவ்விருவரின் தாய் எக்கிளையோ அக்கிளையே இருவரும்.ஒரே கிளை சார்ந்த இருவருக்கும் திருமனம் கூடாது வேறு கிளையுடனே பன்னவேண்டும். இதில் செம்பி நாட்டு மறவர்கள் சகோதிரியின் மகளை திருமனம் செய்வது கிடையாது காரணம் அது மருமகள் உறவு எனவே தன் மக்க்ளுக்கே சம்பந்தம் செய்வர்.


கொண்டையன் கோட்டை கொத்தும் கிளையும்:


1. மருதசா கிளை (மறுவீடு)
அகத்தியர் கிளை கற்பகக் கொத்து
2. வெட்டுவான் கிளை
அழகுபாண்டியன் கிளை முந்திரியக் கொத்து
3. வீணையன் கிளை
பேர் பெற்றோன் கிளை கமுகங்கொத்து
4. சேதரு கிளை
வாள் வீமன் கிளை சீரகக் கொத்து
5. கொடையன் கிளை
அரசன் கிளை ஏலக்கொத்து
6. ஜெயங்கொண்டர் கிளை
வீரமுடிதாங்கினார் கிளை தக்காளி கொத்து
7. சங்கரன் கிளை
சாத்தாவின் கிளை மிளகுக் கொத்து
8. ஒளவையார் கிளை
சாம்புவான் கிளை தென்னங்கொத்து
9. நாட்டை வென்றார் கிளை
தருமர் கிளை மல்லிகை கொத்து
10. வன்னியன் 
-வெற்றிலை கொத்து
அன்புத்திரன்
11. சடைசி
-ஈசங்க்கொத்து
பிச்சிபிள்ளை
12. லோகமூர்த்தி
-பனங்க்கொத்து
ஜாம்பவான்


அஞ்சுகொடுத்து மறவர்:

1.தாது வாண்டார்
2.மனோகரன்
3.வீரன்
4.அமரன்
5.வடக்கை
6.தொண்டமான்

காரன[சக்கரவர்த்தி] மறவர்.


1.தேவன்
2.ராயர்
3.பன்டயன்
4.பருவச்சான்
5.முருகதினி 
6.வளத்தான்
செம்பிநாட்டு மறவர்:
1.மரிக்கா
2.பிச்சை
3.தொண்டமான்
4.கட்டூரான்
5.கருப்புத்திரன்
6.சீற்றமன்
7.தனிச்சன் 

ஆறு நாட்டு வடாகை மறவர்:


1.பொன்னன்
2.சீவலவன்
3.பீலிவலன்
4.கொட்டுரான்
5.நம்புனார்
6.குழிபிறை

உப்புகட்டு மறவர்:


1.புரையார்
2.குட்டுவான்
3.கொம்பன்
4.வீரயன்
5.கானாட்டன்
6.பிச்சை தேவன்
7.கோனாட்டன்

கார்குறிச்சி மறவர்:


1.நம்பியன்
2.மழவனார்
3.கொடிபிரியான்
4.படைகலைசான்
5.கூற்றுவ
6.குத்துவான்

பட்டம்கட்டி மறவர்:


1. காஞ்சிவனத்தார் - காஞ்சி கிளை
2. குட்டினி கிளை - கானாட்டான் கிளை 
3. காவடி கிளை - மின்னாட்டன் கிளை 
4 . பெயரில்லா கிளை - வெட்டுவான் கிளை 
5. தோப்பர் கிளை - குத்துவான் கிளை
6. ஆட்டுக்குட்டி கிளை - குருகுலத்தான் கிளை
7. நயினார் சர்க்கரவர்த்தி கிளை - சர்க்கரவர்த்தி கிளை 

அனைத்து உட்பிரிவு மறவர்களுக்கும் கிளை இருக்கும் ..இந்த தொகுப்பில் 50 கிளைகள் மற்ற மறவரில் 50 கிளைகள்:செம்பியன், வெட்டுவன், விரமண், அரசன், வீரமுடி தாங்கினான், நாட்டுக் குழைத்தான், மரிக்கார், வடக்கு அறியாதான், கோபாலன் மங்கலம், சுதந்தர பாண்டியன், கங்கை, பிச்சை, தொண்டைமான், முத்துக்கிளியான், வீணியம், தேரூர்வான், கம்பத்தான், கிழவி, மறுவீடு, வாப்பா, நச்சாண்டி அமர், கருப்பத்திரன், வெட்டியனர், மாப்பானசம்பந்தன், செற அளவண்டன், சங்கரன், அகத்தா, நாலாப்பிறைகெங்கண்டா, பாச்சாலன், காலா, இராக்கி, வன்னிபண்டாரம், விடிந்தான், கருகளத்தான், வேம்பளத்தான், மகுடி, அம்பியுடுக்கி, அடுகலை, எருமை குளத்தான், கீரைக்கடியான், இத்தி, விளித்திட்டான், வயநாடுவெம்பக்கடி, கொண்டையன் கோட்டையார்.


______________________________________________________________________________________________________________





"Pasumpon" U.Muthuramalinga Thevar

Ukkirapandi Muthuramalinga Thevar also known as Pasumpon Muhturamalinga Thevar was an Indian Politicaian

Born:  October 30, 1908, Tamil nadu
Parents:Ukirapandi Thevar - Indirani.
Religion: Hindu Thevar -Maravar
Died: October 30, 1963
Party: All India Forward Bloc
Education: Union Christian High School, Pasumalai High School






ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் 1908ம் ஆண்டு அக்டோபர் 30ம் தேதி பிறந்தவர் உக்கிரபாண்டி முத்துராமலிங்கத் தேவர்.

மறவர் சமுதாயத்தைச் சேர்ந்தவரான முத்துராமலிங்கத் தேவர், அகில இந்திய பார்வர்ட் பிளாக் தலைவராக இருந்தவர். தேசியவாதி, அரசியலையும், ஆன்மீகத்தையும் தனது இரு கண்களாக பாவித்தவர். பார்வர்ட் பிளாக் கட்சியின் தேசிய துணைத் தலைவராக இரு்நதவர். மூன்று முறை நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

மிகப் பெரும் நிலச்சுவான்தார் குடும்பத்தில் பிறந்தவர் தேவர் (அறுபது கிராமங்களுக்கு சொந்தக்காரர் ). உக்கிரபாண்டித் தேவர், இந்திராணி தம்பதிக்கு ஒரே மகன். இவருக்கு ஜானகி என்ற சகோதரியும் இருந்தார்.
தேவர்  பிறந்த சில காலத்திலேயே அவரது தாயார் மரணமடைந்தார். அவரது சித்தியும் அடுத்த ஆண்டு மரணமடைந்தார்.

1910ம் ஆண்டு முதல் தனது பாட்டி பார்வதியம்மாள் பராமரிப்பில் கள்ளுப்பட்டி கிராமத்தில் வளர்ந்தார் தேவர். தேவரின் தந்தைக்கு மிகவும் நெருங்கிய நண்பரான குழந்தைச்சாமி பிள்ளை, முத்துராமலிங்கத் தேவரை வளர்த்ததில் முக்கியப் பங்கு வகித்தார். பள்ளிக்கு அனுப்பி படிக்க வைத்தார். கமுதியில் உள்ள அமெரிக்கன் மிஷனரி பள்ளியில் படித்தார் தேவர். பின்னர் மதுரை திருப்பரங்குன்றம் பசுமலை உயர் நிலைப் பள்ளியில் படித்தார். பின்னர் மதுரை யூனியன் கிறிஸ்டியன் உயர் நிலைப் பள்ளியில் படித்தார்.

இருப்பினும் 1924ம் ஆண்டு பிளேக் நோய் தாக்கியதால் பள்ளி இறுதியாண்டுத் தேர்வை எழுத முடியாமல் போனது. இந்த நிலையில் பசும்பொன் கிராமத்தில் தனது பூர்வீக சொத்து தொடர்பாக பிரச்சினை ஏற்பட்டதால் அங்கு திரும்பினார் முத்துராமலிங்கத் தேவர். 1927ம் ஆண்டு அந்த வழக்கு தேவருக்கு சாதகமாக முடிந்தது.

அந்த சமயத்தில் மதுரை, ராமநாதபுரம், திருநெல்வேலி மாவட்டங்களில் குற்ற பரம்பரைச் சட்டம் அமலில் இருந்து வந்தது. இது தேவரை பெரும் வேதனை அடையச் செய்தது. இந்த நிலையில் அவர் அரசியலில் குதித்தார். இந்த சட்டத்தை நீக்குவதற்காக அவர் ஆதரவு திரட்டத் தொடங்கினார். கிராமம் கிராமமாக சென்று கூட்டங்களை நடத்தினார்.

  • இந்த நிலையில் 1929ம் ஆண்டு மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த 19 கிராமங்களைச் சேர்ந்த மறவர் சமுதாயத்தினரை இந்த சட்டத்தின் கீழ் கொண்டு வந்தனர். இதை எதிர்த்து மிகப் பெரிய அளவில் கூட்டங்களையும், பேரணிகளையும் நடத்தினார் தேவர். இந்த சட்டத்திற்கு மறவர் சமுதாயத்தினர் யாரும் அடிபணிய வேண்டாம் என கோரிக்கை விடுத்தார். இதையடுத்து அவர்களும் போராட்டத்தில் குதிக்க அந்த சட்டத்தை பகுதியாக விலக்கிக் கொண்டது அப்போதைய சென்னை மாகாண அரசு.

    தேவரின் தொடர் முயற்சிகளால் 2000 கிராமங்கள் இந்த சட்டத்தின் கீழ் இருந்த நிலை மாறி 341 ஆக குறைந்தது.

    தனித்துப் போராடினால் வெற்றி பெற முடியாது, காங்கிரஸுடன் இணைந்து போராடுவது என தீர்மானித்தார் தேவர். இதையடுத்து 1936ம் ஆண்டு அவர் பர்மாவிலிருந்து திரும்பியதும், தென் மாவட்டங்களில் காங்கிரஸ் கட்சியைப் பலப்படுத்தும் முயற்சிகளில் தீவிரமாக இறங்கினார்.

    இந்த சமயத்தில் நடந்த மாவட்ட போர்டு தேர்தலில், முதுகுளத்தோர் தொகுதியில் போட்டியிட்டு நீதிக் கட்சி வேட்பாளரை வீழ்த்தினார். இதுதான் அவர் அரசியலில் பெற்ற முதல் வெற்றி.

    1937ம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்டார் தேவர். இதில் பெரும் வெற்றி பெற்றார். ராமநாதபுரம் மன்னரை இந்தத் தேர்தலில் தோற்கடித்தார் தேவர்.

    இந்தத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. காங்கிரஸ் ஆட்சி வந்ததால், குற்றப் பரம்பரைச் சட்டத்தை நீக்கும் என நம்பினார் தேவர். ஆனால் முதல்வராகப் பதவியேற்ற ராஜாஜி அதை நிறைவேற்றத் தவறினார்.
    இந்த நிலையில், 1946ம் ஆண்டு சென்னை மாகாண சட்டசபைக்குத் தேர்தல் நடந்தது. தேவர் முதுகுளத்தூர் தொகுதியில் போட்டியிட்டு போட்டியின்றி வெற்றி பெற்றார். இந்தத் தேர்தலுக்குப் பின்னர் குற்றப் பரம்பரைச் சட்டம் நீக்கப்பட்டது.

    1955ம் ஆண்டு பார்வர்ட் பிளாக் கட்சியின் தேசிய துணைத் தலைவராக நியமிக்கப்பட்டார் பார்வர்ட் பிளாக். தனது மரணம் வரை அவரே இந்தப் பொறுப்பில் இருந்தார்.

    1963ம் ஆண்டு அக்டோபர் 30ம் தேதி தனது 55வது பிறந்த நாளின்போது மரணமடைந்தார்தேவர்.

    அவரது பிறந்த நாளும், இறந்த நாளும் ஒரே நாளில் வருவதால் அதை குருபூஜையாக முக்குலத்தோர் இனத்தவர் அனுசரித்து பசும்பொன்னில் உள்ள தேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துகின்றனர்.
    ______________
  • பிராமணர்களின் பூனுலை அறுக்கும் போராட்டத்தை பெரியார் அறிவித்த போது பிராமணர்கள் தங்களை காப்பாற்ற முத்துராமலிங்கதேவரை தான் அனுகினார்கள்.உடனே தேவரய்யா பெரியாருக்கு எச்சரிக்கை விடுத்தார்.உங்கள் கருத்துக்களும் போராட்டங்களும் மற்றவரை தீண்ட கூடாது மீறி பிராமணர்களின் பூனுலில் கை வைத்தால் உங்கள் தாடியை அறுப்பேன் என்றார்.போராட்டம் கைவிடப்பட்டது..
  • _____________________











    முத்துராமலிங்க தேவரின் தாத்தா 

    தெய்வத்திரு: வெள்ளைசுவாமி தேவர் 










    முத்துராமலிங்க தேவரின் தந்தை 


    தெய்வத்திரு:உக்கிரபாண்டிதேவர் 

    பாண்டியர்கள் வரலாறு
    பாண்டிய நாடு:

    இந்து சமுத்திரத்தில் மூழ்கிவிட்டதெனக் கருதப்படும்குமரிக்கண்டத்தில் 72 நாடுகளும் தலைநகராக தென்மதுரையும் விளங்கியது. பாண்டிய மன்னர்களின் தலைநகராக விளங்கிய இத்தென்மதுரை கடற்கோளினால் அழிவுற்றது.இக்கடற்கோளில் அழியாது இருந்து எஞ்சிய நாடுகளின் தலைநகராக கபாடபுரம்விளங்கியது.இரண்டாம் கடற்கோளால் அந்நாடும் அழிவுற்றது.இவ்வழிவின் பின்னர் தற்போதுள்ள மதுரை பாண்டியர்களின் தலைநகராயிற்று. பாண்டிய மன்னர்களால் தமிழ்ச் சங்கம் வைத்து தமிழ் வளர்க்கப்பட்டது.

    "லெமூரியா கண்டம் 2,00,000 ஆண்டுகளுக்கு முன் முதல் 50,000 ஆண்டுகட்கு முன் வரை இருந்தது என்றும், 50,000 ஆண்டுகட்கு முன் பெரும்பாலும் அழிந்தது என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். அதில் மீதி இருந்த பகுதி தமிழ்நாட்டுடன் ஒட்டியிருந்த குமரிக்கண்டமாக இருக்க வேண்டும். லெமூரியாவை விழுங்கியது போல, கடல், குமரிக் கண்டத்தையும் விழுங்கி விட்டது. இவர்களின் தோற்றம் கூற முடியாத அளவிற்குத் தொன்மை வாய்ந்ததாகக் கருதப்படுகின்றது.குமரிக் கண்டத்தில்தோன்றிய ஆதி மனித சந்ததியினரே பாண்டியராக உருப்பெற்றிருக்கலாம் என்பது பொதுவாக நிலவும் கருத்து.

    பாண்டியரைப் பற்றிய பதிவுகள்பாண்டிய மன்னர்களின் தலைநகர் பொன்முத்துக்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.முத்து,பொன் அலங்கரித்த கோட்டை வாயில் இருந்தது இவ்வாறு இராமாயணத்தில் உள்ளது.

    மஹாபாரதம்

    திருச்செங்குன்றில் பாண்டவர் படுக்கை உண்டு.திருப்பாண்டி கொடுமுடிதான் விராடநாடு.பாண்டவர் கொடுமுடியின் புறநகரில் வன்னி மரத்தில்தான் ஆடைகளையும் ஆயுதங்களையும் மறைத்து வைத்தனர்.மேலும் அர்ச்சுனன் பாண்டிய மன்னன் ஒருவன் மகளை மணந்தார் எனவும் உள்ளது.
    அசோகனின் கல்வெட்டுக்களில்மகத நாட்டு அரசர்கள் மௌரியர்கள்.மௌரிய அரசன் அசோகன் கல்வெட்டுக்களில் பாண்டிய நாடு பாண்டியர் பற்றிய செய்திகள் உள்ளன.

    மகாவம்சம்

    இலங்கையை ஆண்ட விஜயன் தனியாட்சி புரிந்தவன் இவன் பாண்டிய மன்னன் ஒருவனின் மகளை மணந்தான்.அப்பாண்டிய மன்னனுக்கு ஆண்டுதோறும் பல பரிசுகளை அனுப்பினான் என்று மகாவம்சம்கூறுகின்றது. 

    பிற நாட்டவர் பதிவுகள்

    கி.மு மூன்றாம் நூற்றாண்டு சந்திரகுப்தன் ஆண்ட காலமான கடைச்சங்க காலத்தின் துவக்கம் 'மெகஸ்தனீஸ்' என்ற யவன நாட்டுத்தூதுவன் பாண்டிய நாட்டிற்கு வந்ததாகக் கருதப்படுகின்றது மேலும் அவனது நாட்டுக் குறிப்பில் பாண்டிய நாடு பற்றி தகவல்கள் பல உள்ளன. கொக்கிளிசுக்குப் 'பண்டேயா' என்ற பெண் பிறந்தாள்.அவளுக்கு கடல்சார்ந்த தென்னாட்டைக் கொடுத்தான்.அதில் 350 ஊர்கள் இருந்தன.நாள்தோறும் அரசிக்கு ஓர் ஊர் மக்கள் திறை செலுத்த வேண்டும் என்று ஆணையிட்டான்" என்ற செய்தி யவன நாட்டுத் தூதுவனின் குறிப்பில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    கி.பி. 9 ஆம் நூற்றாண்டு காலப்பகுதியில் 'பிளைனி' என்ற மேனாட்டான் தமிழகத்தைக் காண வந்தான்.அவனது பயண நூலில் பாண்டிய அரசி பற்றி "இந்தியாவின் தெற்கில் 'பண்டோ' என்ற ஒரு சாதி மக்கள் இருந்தனர்.பெண் அரசு புரியும் நிலை உண்டு.கொக்கிளிசுக்கு ஒரு பெண் பிறந்தாள்.அவளுக்கு அன்போடு பெரிய நாட்டை ஆளும் உரிமை கொடுத்தான்.முந்நூறு ஊர்கள் அவளது ஆட்சியில் இருந்தது.பெருஞ்சேனை வைத்திருந்தாள்.அவளது மரபினர் தொடர்ந்து ஆண்டனர்.என குறித்துள்ளார் பிளைனி.

    சங்க காலப் பதிவுகள்பாண்டியர்கள் சந்திர வம்சத்தைச் சார்ந்தவர்கள் எனவும்.வேப்பம் பூமாலை அணிந்தவர்கள் எனவும் மீன்கொடியினை உடையவர்கள் எனவும் சங்க கால நூற்குறிப்புகள், கல்வெட்டுக்கள், சாசனங்கள் மற்றும்மெய்க்கீர்த்திகளும் வரலாற்று மூலங்களாக உள்ளன.
    இமயம்வரை பாண்டியரின் ஆட்சிமலையத்துவசப் பாண்டியன் மகள் மீனாட்சி,இவளது திருமணம் மதுரையில் சிவனுடன் நடந்தது. சோமசுந்தரப் பெருமானாக மதுரைதமிழ்ச் சங்கத்தில் இருந்து தமிழ் வளர்த்தார் இவர்.மதுரை மீனாட்சிபெரும்படையோடு இமயம்வரை படையெடுத்து சென்றாள்.இவளது வழிமுறையினரே மௌரியர்கள்.அந்த வழியில் சித்திராங்கதன்வந்தான் என்பதும் அவன் மகளே சித்திராங்கதை என்பதும் குறிப்பிடத்தக்கது.

    பாண்டிய நாட்டில் பிற நாட்டவர் ஆட்சி

    களப்பிரர் ஆட்சி வடநாட்டில் பல்லவர்களால் அடித்துவிரட்டப்பட்ட களப்பிரர் கி.பி. (300-600) கன்னட நாடு வழியாக கொங்கு நாட்டிலும்,சேர,சோழ,பாண்டி நாட்டிலும் புகுந்து பாண்டியர்களை அடக்க முயன்றனர் .களப்பிரரைத் தொடர்ந்து வந்த பல்லவர் ஆட்சிக்காலமான கி.பி. 600-700 வரையிலும் பாண்டியப் பேரரசு பெரும் வீழ்ச்சியிலிருந்ததாகக் கருதப்படுகின்றது.ஆனாலும் கடுங்கோன் ஆட்சிக் காலத்தில் பாண்டியர் ஆட்சி எழுச்சி பெற்றது.பல்லவர்களின் தாக்கமும் களப்பிரர்களை வீழ்த்தியது. இதன்பின்னர் இடைக்காலப் பாண்டியர் ஆட்சி எழுச்சி பெற்றது.

    மகமதியர் ஆட்சிமகமதியர் வட நாட்டிலிருந்து தென்னாட்டிற்குப் படையெடுத்து வந்தனர். கோவில்களைக் கொள்ளையடிப்பதனை முக்கிய நோக்கமாகக் கொண்டு படை திரட்டி வந்த கில்ஜி பேரரசின் மன்னன் மாலிக்காபூரிடம் பாண்டிய மன்னனான சுந்தரபாண்டியனால் தன் தம்பியான இரண்டாம் வீரபாண்டியனை வெல்ல உதவியினை நாடினான். இரண்டாம் வீரபாண்டியனை வெற்றி கொண்ட மாலிக்காபூர் சுந்தரபாண்டியனை அடிமைப்படுத்தினான் என்பதும் குறிப்பிடத்தக்கது.சயாவுடீன் பார்னி , அமீர்குசுரு, வாசப் போன்றவர்களின் கூற்றுகள் படி மாலிக்காபூர் பாண்டிய நாட்டில் அமைந்திருந்த கோயில்களை இடித்து அங்கிருந்த பொன், பொருள்களைக் கொள்ளையிட்டு சிற்பங்கள்பலவற்றையும் சிதைப்பதற்குக் காரணமானான். மேலும் கொள்ளையிட்ட பொருள்களை டில்லிக்குக் கொண்டு சென்றான் என்பதும் குறிப்பிடத்தக்கது. சுந்தரபாண்டியன் மற்றும் இரண்டாம் வீரபாண்டியன் போன்றோரிடமிருந்து மாலிக்காபூர் 612 யானைகள், 20,000 குதிரைகள், 96,000 மணங்கு பொன், முத்து மற்றும் அணிகலன்கள் அடங்கிய பெட்டிகளினை எடுத்துச் சென்றான் என பார்னி என்பவன் குறித்துள்ளான். 1830 ஆம் ஆண்டளவில் பாண்டிய நாட்டில் மகமதியர் ஆட்சி நுழைந்தது. டில்லி துக்ளக்கின் அதிகாரியாகத் திகழ்ந்த 'ஜலாலுடீன் அசன்சா' மதுரையினைக் கைப்பற்றி ஆட்சி செய்தான். இவனது ஆட்சிக்குப் பின்னர் அல்லாவுடீன் உடான்றி,குட்புதீன், நாசிருடீன், அடில்ஷா, பஃருடீன் முபாரக் ஷா, அல்லாவுடீன் சிக்கந்தர்ஷா போன்றவர்களின் ஆட்சி மதுரையில் இருந்தது. இவர்கள் தம் பெயர்களினால் நாணயங்கள் வெளியிட்டனர். இவர்களைப் பற்றிய தகவல்கள் புதுக்கோட்டையில் உள்ள இரு கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. இபின்படூடா என்பவரின் குறிப்பின் படி இம்மன்னர்களின் ஆட்சிக் காலத்தில் உள்நாட்டுக் குழப்பங்கள்,கலகங்கள் ஏற்பட்டன. கோயில் வழிபாடு,விழா இன்றி சீரழிந்தன. பாண்டிய நாட்டு மக்கள் துன்புற்றனர். என அவர் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

     ஸ்ரீவல்லிபுத்தூரில் 1453 ஆம் ஆண்டளவில் வரையப்பட்ட கல்வெட்டில் "மகாபலி வாணதரையர் சீர்மையான மதுரை மண்டலம் " எனக் குறிப்பிடப்பட்டுள்ளது மேலும் மதுராபுரி நாயகன், பாண்டிய குலாந்தகன் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. கி.பி. 1483 ஆம் ஆண்டளவில் வரையப்பட்ட கல்வெட்டொன்றின்படி மாவலிவாணாதிராயர் பாண்டியருக்குத் திறை செலுத்தினர் எனக் குறியிடபட்டுள்ளது.